புதுச்சேரி | மது போதையில் வாகனம் ஓட்டினால் அபராதம் - போக்குவரத்து காவலர்கள் அதிரடி! - Seithipunal
Seithipunal


புதுவையில் கடந்த சில நாட்களாக போதையில், வாகனங்களை ஓட்டுவதால் விபத்துகள் நடந்து உயிர் சேதமும், பொருட்சேதமும் அதிகளவில் ஏற்பட்டு வருவதால் போதையில் வாகனங்களை ஓட்டுபவர்களை கண்டறிந்து அபராதம் விதிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். 

அதனை அடுத்து வடக்கு பகுதி போக்குவரத்து காவலர் உத்தரவின்பேரில், புதுச்சேரி நகரப்பகுதிகளில் வாகன ஓட்டிகளிடம் கேமராவுடன் கூடிய, மதுகுடித்திருப்பதை கண்டறியும் நவீன கருவியை கொண்டு போக்குவரத்து காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். 

அந்த சோதனையில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி வந்த 6 பேருக்கு போலீசார், தலா ரூ.10 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.60 ஆயிரம் அபராதம் விதித்தனர். இது போல் கோரிமேடு பகுதியில் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டி வந்த 3 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர். 

மேலும் கிருமாம்பாக்கம் பகுதியில் 6 பேருக்கு ரூ.60 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்நிலையில் புதுச்சேரியில் மட்டும் நேற்று ஒரேநாளில் மதுகுடித்துவிட்டு வாகனம் ஓட்டிய 15 பேருக்கு ரூ.1½ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. 

இது குறித்து சீனியர் காவல் எஸ்.பி. தெரிவிக்கையில், வார இறுதி விடுமுறை நாட்களில் புதுவைக்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதை 10 இடங்களை கண்டறிந்துள்ளோம். 

அனைவரும் போக்குவரத்து விதிகளை மதிக்கவேண்டும். நாங்கள் புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளையும், புதுவை உள்ளூர் மக்கள் என அனைவரையும் சமமாக நினைத்து 
விதிமுறைகளைமீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கிறோம். 

மது அருந்தி விட்டு வாகனம் ஒட்டுபவர்களை கண்டறிய, மேலும் சோதனைகளை தீவிரப்படுத்தபட்டு அவர்களுக்கு கடுமையான அபராதமும் விதிக்கப்படும் என தெரிவித்தார்.  
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Puducherry drink and drive penalty traffic police action


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->