பணிக்குத் திரும்பாத ஊழியர்கள் - புதுச்சேரி அரசு எடுத்த அதிரடி உத்தரவு.!
puthuchery government order action against to continue leave employees
புதுச்சேரி மாநில அரசின் பல்வேறு துறைகளில் விடுமுறையில் சென்ற அரசு ஊழியர்கள் சிலர் பணிக்கு திரும்பாமல் நீண்ட நாட்களாக இருப்பதனால், பிற அரசு ஊழியர்களுக்கு பணிசுமை அதிகரித்துள்ளதோடு, அரசு துறை பணிகளிலும் தேக்க நிலை ஏற்படுகிறது.
பணியில் இருக்கும்போது அவசரமாக விடுமுறை தேவை என்று எடுத்த அரசு ஊழியர்கள் விடுமுறை முடிந்த பிறகு பணிக்கு திரும்புவது கிடையாது. அரசு துறைக்கும் தகவல் தெரிவிப்பது கிடையாது. இது குறித்து புதுச்சேரி தலைமை செயலர் சரத்சவுகானுக்கு புகார் சென்றது.

இதையடுத்து, அவர் ஒவ்வொரு அரசு துறையிலும் நீண்ட காலமாக பணிக்கு வராமல் இருக்கும் அரசு ஊழியர்களை கணக்கெடுத்து அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக நிர்வாக சீர்திருத்த துறை, அனைத்து துறைகளுக்கும் சுற்றிக்கை அனுப்பி பணிக்கு வராத அரசு ஊழியர் விவரங்களை உடனடியாக சமர்பிக்க உத்தரவிட்டுள்ளார்.
நீண்ட காலமாக பணிக்கு திரும்பாத ஊழியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. அந்த விளக்கம் திருப்தி இல்லாத பட்சத்தில், பணிக்கு திரும்பாத அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்களது பணிக்காலம் ரத்து செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
English Summary
puthuchery government order action against to continue leave employees