புதுச்சேரி || அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி மாநிலத்தில், குரூப் 'பி' மற்றும் 'சி' ஊழியர்களுக்கு ரூ.6,908 மற்றும் முழுநேர தற்காலிக ஊழியர்களுக்கு ரூ.1,184 போனஸ் வழங்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. 

மத்திய அரசு ஊழியர்களுக்கான போனஸ் குறித்து மத்திய நிதி அமைச்சகத்தின் செலவினங்கள் துறை அரசாணை ஒன்றை வெளியிட்டது. அந்த அரசாணையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த நிதி ஆண்டுக்கான இடைக்கால போனஸ் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், கடந்த (2021-22) மார்ச் 31ம் தேதி பணியில் இருந்தவர்கள் மற்றும் கடந்த நிதி ஆண்டில் குறைந்தபட்சம் 6 மாதங்கள் தொடர்ந்து பணியில் இருந்தவர்கள் ஆகியோருக்கு இடைக்கால போனஸ் வழங்கப்படும். போனஸ் கணக்கிடுவதற்கான உச்சவரம்பு ரூ.7000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

இதன் பிறகு, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி அரசில் பணிபுரியும் பிரிவு 'பி ' மற்றும் 'சி ' ஊழியர்களுக்கு போனஸ் வழங்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

puthuchery govt depavali bona allounced for central government workers


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->