அட கடவுளே இது என்னடா தமிழுக்கு வந்த சோதனை! - அங்கன்வாடி மையத்தில் அல்லோலப்பட்ட தாய்மொழி! - Seithipunal
Seithipunal


கரூர் மாவட்டம் குளித்தலை ஒன்றியத்தில் புதிதாக திறக்கப்பட்ட அங்கன்வாடி மையத்தில் இடம்பெற்ற எழுத்துப்பிழைகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த மையம் ரூ.11 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு, இந்நிலையில், குழந்தைகளுக்கு கற்றுத்தரப்படும் பகுதிகளில் தவறான தமிழில் எழுத்துக்கள் இடப்பட்டுள்ளன.

எம்.எல்.ஏ. மாணிக்கம் தலைமையில் திறந்து வைக்கப்பட்ட இம்மையத்தில், கொய்யா பழம் “கோய்யா பலம்” எனவும், வெண்டைக்காய் “வெட்டககாய்” எனவும், வாழை பழம் “வாழைபலம்” எனவும் பிழைகள் இடம்பெற்றிருந்தது. இதனுடன், தர்பூசணி “தர்புசணி” எனவும், ஆங்கில மாதங்களும் தவறாக எழுதப்பட்டிருந்தன.

நிகழ்ச்சிக்கு வந்தவர்கள், மற்றும் எம்எல்ஏ மாணிக்கம் இது தொடர்பாக அதிர்ச்சியும் அதிருப்தியும் தெரிவித்தனர். சிறுவர்களுக்கு தவறாகக் கற்றுக் கொடுப்பது மிகவும் பாதகமாக இருக்கும் என பெற்றோர்கள் கவலை தெரிவித்தனர்.

இதையடுத்து, மையத்தில் உள்ள அனைத்து தவறான எழுத்துக்களும் திருத்தப்பட்டு சரிசெய்யப்படும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Test came to Tamil Mother tongue encouraged at Anganwadi Centre


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->