மகனை கொன்ற சோகத்தில் தந்தையும் உயிரிழப்பு! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பொம்மைய நாயக்கர் தெருவைச் சேர்ந்த ராமசாமி (74) என்பவர், ஓய்வு பெற்ற வேளாண் அதிகாரி. அவருக்கு மூன்று மகன்கள், இதில் மூன்றாவது மகன் சுப்பிரமணிக்கு (34) மது அருந்தும் பழக்கம் அதிகம். 

சுப்பிரமணி அடிக்கடி மதுவுக்குப் பணம் கேட்டு தந்தையை தொந்தரவு செய்து வந்தார். கடந்த 1-ந்தேதி, வழக்கம்போல சுப்பிரமணி பணம் கேட்டபோது, ராமசாமி தரமுடியாது என்று திட்டவட்டமாக மறுத்தார்.

இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரத்தில் சுப்பிரமணி தனது தந்தையைத் தாக்கினார். தற்காப்பு செய்வதற்காக ராமசாமி அரிவாளை எடுத்துக்கொண்டு மகனை வெட்ட, சுப்பிரமணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக திருத்தங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து, ராமசாமியை கைது செய்தனர். ராமசாமிக்கு சர்க்கரை நோயும் உடல் நலக் குறைபாடுகளும் இருந்தன.

மகனை கொன்று சோகத்தில் இருந்த ராமசாமி, திடீரென உடல் நலக்குறைவால் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். ஆனால் சிகிச்சை பலனின்றி, அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The father also lost his life in the tragedy of killing his son


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->