பால் விலையை லிட்டருக்கு நான்கு ரூபாய் உயர்த்த  புதுவை அரசு முடிவு.!! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசு சார்பு நிறுவனமான 'பாண்லே' மூலம் மாநிலம் முழுவதும் பால், தயிர், மோர், நெய், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பால் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த பொருட்கள் தரமாகவும், சலுகை விலையிலும் கிடைப்பதால் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. 

இந்நிலையில், பாண்லே நிறுவனத்தில் பால் விலையை உயர்த்துவதற்கு அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, தற்போது 44 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் ஒரு லிட்டர் பால், நான்கு ரூபாய் உயர்த்தி 48 ரூபாய்க்கு விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளது. 

இதேபோன்று, கொள்முதல் விலையும் லிட்டருக்கு மூன்று ரூபாய் உயர்த்தி முப்பத்து நான்கில் இருந்து முப்பத்தேழு ரூபாய்க்கு கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும், கடந்த ஓராண்டாக பாண்லே தொடர் நஷ்டத்தில் இயங்குவதால் இந்த நஷ்டத்தை ஈடுகட்டுவதற்காக பால் விலையை  உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

puthuchery govt increase panley milk price


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->