பொதுக்கூட்டங்களில் பங்கேற்காத ராகுல் காந்தி - நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நாடு முழுவதும் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், மத்திய பிரதேசம் மாநிலத்தின் சத்னா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஞ்சி உள்ளிட்ட நகரங்களில், இந்தியா கூட்டணியின் செல்வாக்கை நிரூபிக்கும் வகையில் இன்று நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டங்களில் ராகுல் காந்தி பங்கேற்க திட்டமிட்டிருந்தார். 

இந்த நிலையில், ராகுல் காந்திக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இன்று பிரசாரம் மேற்கொள்ள மாட்டார் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:-

"ராகுல் காந்திக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால், அவரால் இன்று டெல்லியை விட்டு வெளியேற முடியவில்லை. எனவே, சத்னா மற்றும் ராஞ்சி பொதுக்கூட்டங்களில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்று உரையாற்றுகிறார்" என்று பதிவிட்டுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ragul gandhi not participate in election campaighn meetings for health issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->