சிறுமிக்கு நடந்த கொடூரம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது - ராகுல்காந்தி கண்டனம்.! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி மாநிலத்தில் காணாமல் போன ஒன்பது வயது சிறுமி, வாய்க்காலில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து சிறுமியின் உறவினர்கள், கொலையாளிகளைப் பிடித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், சிறுமியின் உயிரிழப்பு தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தொடர்ந்து கருத்துக்களைப் பதிவு செய்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ளதாவது:-

"புதுச்சேரியில் 9 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது; நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் ஏன் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன?;

2022-ல் மட்டும் பெண்களுக்கு எதிராக 4.5 லட்சம் குற்றச் சம்பவங்கள் நடந்துள்ளன; அதில் பாலியல் வன்கொடுமை வழக்குகள் 31,000;  
ஒரு தேசமாக நாம் சுயபரிசோதனை செய்ய வேண்டிய விஷயம் இது; பெண்களுக்கான பாதுகாப்பும் மரியாதையும்தான் வளர்ந்த தேசத்தின் அடையாளம்" என்றது தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ragulgandhi condems puthuchery girl died


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->