ராகுல்காந்தி பிறந்தநாள்! ராகுல்காந்தி சொத்து மதிப்பு இத்தனை கோடியா? - Seithipunal
Seithipunal


இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்த நாள் இன்று. 

ராகுல் காந்தி 1970 ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி பிறந்தார். நேரு குடும்பத்தைச் சேர்ந்த ராகுல் காந்தி முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கும் சோனியா காந்திக்கும் மகனாக பிறந்தார். ராகுல் காந்தி இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி வயநாடு மற்றும் ரேபரேலி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த நிலையில், ராகுல் காந்தி வயநாடு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார். நடைபெறவுள்ள வயநாடு இடைதேர்தலில் காங்கிரஸ் சார்பில் பிரியங்காகாந்தி போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராகுல் காந்தியின் சொத்து மதிப்பு விவரங்கள் :

ராகுல் காந்தி கடந்த ஐந்து ஆண்டுகளில் 6 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி உள்ளதாக ராகுல் காந்தி தனது பிரமாணப் பத்திரத்தில் கூறியுள்ளார். ராகுல் காந்தியின் மொத்த சொத்து மதிப்பு 20.39 கோடி ரூபாய் என வேட்புமனு தாக்கலின் போது பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தியிடம் ரூபாய் 55 ஆயிரம் ரொக்கம் இருப்பதாகவும் இரண்டு வங்கி கணக்கில் ரூபாய் 26.25 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 25 நிறுவனங்களில் பங்குகளை வாங்கியதாகவும் அதில் 4.33 கோடி டெபாசிட் செய்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

 7 முயூச்சல் பண்டுகளில் 3.81 கோடி ரூபாய் மற்றும் சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க பத்திரங்களும் உள்ளது.  ராகுல் காந்தியிடம் 4.20 ரூபாய் மதிப்புள்ள தங்கங்கள் மற்றும் இதர நகைகள் உள்ளது. ராகுல் காந்தியின் மொத்த அசையும் சொத்து மதிப்பு 9.24 கோடி ரூபாய் தேர்தலில் வேற்றுமனூர் தாக்கல் செய்யும்போது ஆவணங்கள் மூலம் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rahul Gandhi birthday


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->