பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு: ராகுல் காந்தி..! - Seithipunal
Seithipunal


காஷ்மீர் பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு முழு ஆதரவு அளிப்போம் என லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கூறியுள்ளார்.

இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டம் டில்லியில் நடைபெற்றது. மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த இந்தக்கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நட்டா, நிர்மலா சீதாராமன், கிரண் ரிஜிஜூ, காங்கிரஸ் தலைவர் கார்கே, ராகுல், திமுக எம்.பி., திருச்சி சிவா, சமாஜ்வாதி, திரிணமுல், தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு காங்கிரஸ் தலைவர் கார்கே கூறியதாவது: 'பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு அனைத்து கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன. காஷ்மீரில் அமைதி நிலவ அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும் என நாங்கள் வலியுறுத்தினோம்.' என்று கூறியுள்ளார்.

அத்துடன் இது குறித்து ராகுல் காந்தி கூறுகையில், பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு அனைவரும் கண்டனம் தெரிவித்தோம். அரசு எடுக்கும் எந்த நடவடிக்கைக்கும் எதிர்க்கட்சிகள் முழு ஆதரவு அளிக்கும் என்று தெரிவித்துள்ளார். இதனிடையே, ராகுல் பயங்கரவாத தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூற நாளை காஷ்மீர் செல்லவுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rahul Gandhi says opposition parties will support the central government action against the terror attack


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->