மோடியை கலாய்த்த கலாய்த்த ராகுல் காந்தி! - Seithipunal
Seithipunal


ஜம்மு காஷ்மீர் மக்களின் பயத்தையும், துயரத்தையும் காங்கிரஸ் கட்சி துடைக்க விரும்புகிறது. இந்தியா கூட்டணியின் அன்பு, ஒற்றுமை, மரியாதை ஆகியவற்றால் மோடி தோற்கடிக்கப்பட்டார் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.

சட்டமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஜம்மு காஷ்மீரில் அரசியல் களம் சூடுபிடித்தது. செப் 18, 25 மற்றும் அக் 1 ஆகிய நாட்களில் மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்தப்பட்டு அக் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின்னர் நடைபெறும் முதல் தேர்தல் இதுவாகும். இந்நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் 2 நாள் பயணமாக ஜம்மு காஷ்மீர் சென்றுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடந்த காங்கிரஸ் தொண்டர்கள் கூட்டத்தில் ராகுல் காந்தி கூறியதாவது, 'மக்களவைத் தேர்தலின் போது இந்தியா கூட்டணி, மனதளவில் மோடியின் நம்பிக்கையை அழித்துவிட்டது. அவர் ராகுல் காந்தியால் தோற்கடிக்கப்படவில்லை, காங்கிரஸ் கட்சியின் கொள்கை, இந்தியா கூட்டணியின் அன்பு, ஒற்றுமை, மரியாதை ஆகியவற்றால் தோற்கடிக்கப்பட்டார். மக்களவைத் தேர்தலுக்கு முன்னர் இருந்த மோடியின் உடல்மொழி தேர்தலுக்குப் பின்னர் முற்றிலுமாக மாறியுள்ளது.

இந்திய வரலாற்றில் சுதந்திரத்திற்குப் பின்னர், யூனியன் பிரதேசங்கள் எல்லாம் மாநிலங்களாக மாற்றப்பட்டபோது, ஒரு மாநிலம் யூனியன் பிரதேசமானது. இதுபோன்று முன்னதாக நடக்கவில்லை. எனவேதான் ஜம்மு காஷ்மீர் மக்கள், எங்களுக்கும் இந்த நாட்டுக்கும் முக்கியம். ஜம்மு காஷ்மீர் மக்களின் இதயத்தில் உள்ள சோகம், அச்சத்தை ஒழிப்பதே எனது நோக்கம். மேலும் ஜம்மு காஷ்மீர் மக்களின் பயத்தையும், துயரத்தையும் காங்கிரஸ் கட்சி துடைக்க விரும்புகிறது என்று ராகுல் காந்தி தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rahul Gandhi who upset Modi


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->