ஓபிசி மக்களை அவமதிக்கும் செயல்.."புள்ளிவிவரங்களை வெளியிடுங்க".. ராகுல் காந்தி வலியுறுத்தல்..!! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநில சட்டமன்ற பொதுத் தேர்தல் வரும் மே 10ம் தேதி நடைபெற உள்ளது. ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இடையே மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்கான நேரடி போட்டி நிலவுகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கர்நாடக மாநில தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அந்த வகையில் நேற்று கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் சாதி வாரிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் புள்ளிவிவரங்களை மத்திய அரசு வெளியிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து பிரச்சார மேடையில் பேசிய அவர் "கடந்த 2011ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளி விவரங்களை மத்திய அரசு வெளியிட வேண்டும். மத்திய அரசு செயலாளர்களில் 7 விழுக்காடு மட்டுமே இதர பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின மக்கள் இருந்து வருகின்றனர். இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் வளர்ச்சி குறித்து பேசும் பிரதமர் மோடி புள்ளி விவரங்களை வெளியிட வேண்டும்.

அவ்வாறு வெளியிடப்படவில்லை என்றால் அது இதர பிற்படுத்தப்பட்ட மக்களை அவமதிப்பது போன்ற செயலாகும். இதர பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடி மக்களுக்கு செய்யும் அநீதியாகும். இந்த சமூக மக்கள் அதிக அளவில் இருந்தும் அரசு வேலைகளில் அவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் இல்லை. மக்கள் தொகைக்கு ஏற்ப உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும். எனவே மத்திய அரசு உடனடியாக சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பின் புள்ளிவிவரங்களை வெளியிட வேண்டும்" என ராகுல் காந்தி பிரதமர் மோடியை வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

RahulGandhi urges PM Modi to publish caste wise census statistics


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->