ரெயில் பெட்டிகள் குறைக்கப்படவில்லை - ரெயில்வே நிர்வாகம் விளக்கம்.!
railway department explain train coaches not reduced
நாட்டில் இயக்கப்படும் ரெயில்களில் முன்பதிவில்லா ரெயில் பெட்டிகளின் எண்ணிக்கை 4-ல் இருந்து 2-ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் 26 ரெயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளை குறைத்து, அதற்கு பதிலாக ஏ.சி. ரெயில் பெட்டிகளை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து முன்பதிவில்லா ரெயில் பெட்டிகளை குறைக்கும் நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் இது குறித்து ரெயில்வே விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- "முன்பதிவு செய்யப்படாத ரெயில் பெட்டிகள் எண்ணிக்கை குறைப்பு என்ற தகவல் ஆதாரமற்றது என்று ரெயில்வே தெரிவித்துள்ளது.
English Summary
railway department explain train coaches not reduced