திருப்பதி || தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல்.! பலரது உயிரைக் காப்பாற்றிய தொழிலாளி.! - Seithipunal
Seithipunal


ஆந்திரா மாநிலத்தில் உள்ள திருப்பதி மாவட்டத்தில் சூரப்பகாசம் பகுதியை சேர்ந்தவர் ரவிசங்கர். நேற்று காலை இவர் ரேணிகுண்டா புடி ரெயில் நிலையம் அருகே தனது மாடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டிச்சென்றபோது தண்டவாளத்தில் விரிசல் இருப்பதை பார்த்தார்.

ஆனால், சிறிது நேரத்தில் அந்த வழித்தடத்தில் சென்னையில் இருந்து மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் வர இருந்ததனால் பதற்றம் அடைந்த அவர் கிராமத்தில் உள்ள வாலிபர்களுக்கு தகவல் தெரிவித்தார். அவர்களிடம் உடனடியாக சிவப்பு நிற துணியை கொண்டு வருமாறு தெரிவித்தார். அவர்களும் மிக விரைவாக செயல்பட்டு சிவப்பு நிற துணியை கொண்டு வந்தனர்.

இந்த சிவப்பு துணியை ரவி சங்கர் காட்டியபடி தண்டவாள விரிசல் உள்ள இடத்தில் இருந்து ரெயில் வரும் திசையை நோக்கி சிறிது தூரம் ஓடினார். அவர்கள் எதிர்பார்த்ததை போலவே மும்பை-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் அதிக வேகத்தில் வந்து கொண்டு இருந்தது. தண்டவாளத்தின் நடுவில் நின்று கொண்டிருந்த ரவிசங்கர் தன்னிடமிருந்த சிகப்பு துணியை தூக்கி காட்டினார். 

இதை பார்த்த ரெயில் என்ஜின் டிரைவர் ஏதோ ஆபத்து உள்ளதாக நினைத்து ரெயிலை உடனடியாக நிறுத்தினார். இதுகுறித்து புடி ரெயில் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலை அறிந்த ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தண்டவாள விரிசலை சரி செய்தனர். 

அதன் பின்னர் விரிசல் ஏற்பட்ட இடத்தில் இருந்து ரெயில்கள் மெதுவாக இயக்கப்பட்டது. பெரும் விபத்தை தடுத்து நிறுத்திய ரவிசங்கருக்கு ரெயில்வே அதிகாரிகள் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

railway trake damage worker stop the train


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->