தலைமைச் செயலகத்தில் ராஜீவ் காந்தி சிலை வைக்க கூடாது... - எதிர்க்கட்சி திட்டவட்டம்!
Rajiv Gandhi statue not placed Chief Secretariat
தெலுங்கானா, ஹைதராபாத்தில் உள்ள தலைமை செயலகத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி சிலை அமைப்பதற்காக முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி அடிக்கல் நாட்டினார்.
இதற்கு அந்த மாநில எதிர்க்கட்சியான பி.ஆர்.எஸ். கட்சி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் அடிக்கல் நாட்டிய இடத்தில் தெலுங்கானா அன்னையின் சிலை வைக்க முடிவு செய்யப்பட்டிருந்தது.
ராஜீவ் காந்தி சிலை அமைப்பதற்கு பதிலாக மாநிலத்தின் கலாச்சார அடையாளத்தை உணர்த்தும் அன்னையின் சிலை வைக்க வேண்டும் எனவும் ராஜீவ் காந்தி சிலை அமைப்பு முடிவை உடனடியாக கைவிட வேண்டும் எனவும் சந்திரசேகரராவின் மகள் கவிதா வலியுறுத்தியுள்ளார்.
English Summary
Rajiv Gandhi statue not placed Chief Secretariat