மக்களவையை ஆட்டம் காண வைத்த திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா.! - Seithipunal
Seithipunal


நேற்று மாநிலங்களவையில் 2022-23ஆம் ஆண்டிற்கான கூடுதல் மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா பேசியதாவது:- 

"நாட்டில் பொருளாதார முன்னேற்றம் குறித்து அரசு பொய்யான தகவல்களை அளித்து வருகிறது. அதாவது, "பொருளாதாரம் சிறப்பாக உள்ளது என்றும், அனைவருக்கும் எரிவாயு சிலிண்டர்கள், வீடுகள் மற்றும் மின்சாரம் போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் கிடைக்கிறது என்று கூறி மத்திய அரசு பொதுமக்களை நம்ப வைக்கப் பார்க்கிறது. இது அனைத்தும் பொய் என்ற உண்மை 8 மாதங்களுக்கு பிறகு இப்போது வெளிவருகிறது. 

நாட்டின் வளர்ச்சியைப் பற்றி நரேந்திர மோடியின் அரசு தவறான தகவல்களை வெளியிட்டு வருகிறது. தற்போது இந்தியப் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அதை மேம்படுத்துவதற்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். 

நாட்டில் "பப்பு" என்ற சொல்லை உருவாக்கியது மோடி அரசாங்கமும் ஆளும் கட்சியும்தான். இந்த வார்த்தையை பிறரை இழிவுபடுத்தவும், திறமையின்மையை குறிக்கவும் நீங்கள் பயன்படுத்துகிறீர்கள். ஆனால் உண்மையான பப்பு யார்? என்பதை இந்த புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த அக்டோபர் மாதம் நாட்டின் தொழில்துறை உற்பத்தி கடந்த 26 மாதங்களில் இல்லாத அளவிற்கு நான்கு சதவீதம் சரிந்தது. அதேபோல், உற்பத்தித் துறை 5.6 சதவீதமாகக் குறைந்துள்ளது. ஆளுங்கட்சி தலைவரால் தனது சொந்த மாநிலத்தில்கூட வெற்றிபெற முடியவில்லை. இப்போது சொல்லுங்கள் யார் பப்பு? 

நேற்று மாநிலங்களவையில், வளர்ந்து வரும் சந்தைகளில் செய்யப்படும் முதலீடுகளில் 50% முதலீடுகள் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் இந்தியாவிற்குள் வருவதாக நிதி அமைச்சர் தெரிவித்தார். 

ஆனால் வெளியுறவுத்துறை இணை அமைச்சர், கடந்த வெள்ளிக்கிழமை, இதே அவையில் ஒரு தகவலை தெரிவித்தார். அதாவது இந்த ஆண்டு முதல் பத்து மாதங்களில் மட்டும் சுமார் இரண்டு லட்சம் பேர், தங்கள் இந்திய குடியுரிமையை துறந்துள்ளதாகத் தெரிவித்தார். 

இந்த அரசு அமைந்த பிறகு கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் சுமார் 12.5 லட்சத்திற்கும் அதிகமானோர் தங்கள் இந்திய குடியுரிமையைத் துறந்துள்ளனர். மேலும்,  பணம் செலுத்தி மற்ற நாடுகளின் குடியுரிமையைப் பெற்றுக் கொள்வதற்கும் தயாராக உள்ளார்கள். இதுதான் ஆரோக்கியமான பொருளாதாரச் சூழலின் அறிகுறியா? இதுதான் ஆரோக்கியமான வரிச் சூழலா? இப்போது சொல்லுங்கள் யார் பப்பு? 

நாட்டில் ஒரு பயங்கரமான சூழல் நிலவுகிறது. அதாவது அதிக சொத்து வைத்துள்ளவர்கள் மற்றும் தொழிலதிபர்களின் தலைக்கு மேல் அமலாக்கத் துறையின் கத்தி தொங்கிக்கொண்டிருக்கிறது.

நாட்டில் ஆளுங்கட்சி பல நூறு கோடியை செலவழித்து மக்கள் பிரதிநிதிகளை வாங்குகிறது. அதேசமயம் அமலாக்கத்துறை விசாரணை செய்யும் 95 சதவீத வழக்குகள் எதிர்க்கட்சி உறுப்பினர்களைக் குறி வைத்தே உள்ளது. 

கடந்த 2016-ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கையானது அதன் இலக்கை அடைவதில் தோல்வி அடைந்துள்ளது. கள்ள நோட்டுகளை ஒழிப்பது இன்றும் ஒரு கனவாகவே உள்ளது" என்று அவர் பேசினார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rajyashaba meeting tirinamool congras mp mahoova moithra speach


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->