ஜனாதிபதி மாளிகை டிசம்பர் 1 முதல் பொதுமக்கள் பார்வைக்கு திறப்பு.! - Seithipunal
Seithipunal


டிசம்பர் 1-ந் தேதி முதல் வாரத்தில் ஐந்து நாட்களுக்கு ஜனாதிபதி மாளிகை, பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து, புதன், வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என வாரத்தின் 5 நாட்களில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள். தலா 1 மணி நேரம் வீதம் காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணிவரையும் 5 வகையான நேரம் ஒதுக்கப்படும். 

மேலும் ஜனாதிபதி மாளிகை அருங்காட்சியக வளாகத்தை அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து, செவ்வாய்க்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை வாரத்துக்கு 6 நாட்கள் பார்வையிடலாம் என்று ஜனாதிபதி செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு சனிக்கிழமையிலும் காலை 8 மணி முதல் 9 மணி வரை ஜனாதிபதி மாளிகை முற்றத்தில், ஜனாதிபதி மெய்க்காவலர்கள் குழு மாற்றப்படும் நிகழ்ச்சியையும் பார்க்க பொது மக்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

இதற்கு பார்வையாளர்கள், http://rashtrapatisachivalaya.gov.in/rbtour என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து நேர ஒதுக்கீடு பெற வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rashtrapati Bhavan to be open for public viewing from Dec 1


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->