கோடிக்கணக்கில் 2000 ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெற்ற ரிசர்வ் வங்கி! மீதம் இவ்வளவுதானா!
RBI recovered 88 percent of 2000 rupee notes
டெல்லியில் இதுவரை ரூ. 3.14 லட்சம் கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுக்களை திரும்பப் பெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ஆா்.பி.ஐ கடந்த மே 19-ஆம் தேதி, புழக்கத்தில் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில் 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கிக் கிளைகளில் மாற்றி சில்லறையாகப் பெற்றுக் கொள்ளலாம் அல்லது வங்கிக் கணக்கில் செப்டம்பர் 30-க்குள் மாற்றிக் கொள்ளலாம் எனத் அறிவித்திருந்தது.
இந்நிலையில், ரூ. 3.14 லட்சம் கோடி மதிப்பிலான ரூ. 2000 நோட்டுகள் ஜூலை 31 வரை வங்கிகளில் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, ''மே 19-ஆம் தேதி நிலவரப்படி புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகள் ரூ. 3.56 லட்சம் கோடியில், ரூ. 3.14 லட்சம் கோடி மதிப்பிலான நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளது.
இது மொத்த நோட்டுகளில் 88 சதவிகிதமாகும். இன்னமும் ரூ. 42,000 கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
RBI recovered 88 percent of 2000 rupee notes