ஆதரவு கடிதத்துடன் ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரிய ரேகா குப்தா..!
Rekha Gupta asks Governor for right to form government
டெல்லி சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. மாபெரும் வெற்றி பெற்று, கிட்டத்தட்ட 27 ஆண்டுக்கு பிறகு டெல்லியில் பா.ஜ.க. ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
டெல்லியின் அடுத்த முதலமைச்சர் யார் என்ற கேள்விக்கு நேற்று விடை கிடைத்துள்ளது.டெல்லியின் அடுத்த முதலமைச்சரை தேர்வு செய்வதற்கான பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று நடந்தது. இதில் டெல்லியின் புதிய முதலமைச்சராக ரேகா குப்தா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், டெல்லி ஆளுநர் வி.கே.சக்சேனாவை சந்தித்த ரேகா குப்தா தனது ஆதரவாளர்கள் கடிதத்தை அளித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார். அவரது மனுவை ஏற்றுக்கொண்ட ஆளுநர் சக்சேனா ரேகா, குப்தாவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார்.
இன்று நடைபெறும் பதவியேற்பு விழாவில் டெல்லியின் முதலமைச்சராக ரேகா குப்தா பதவியேற்கிறார். இந்த விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பா.ஜ.க. தலைவர்கள், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் உள்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.
English Summary
Rekha Gupta asks Governor for right to form government