கடத்தல்காரர்களிடம் 2178 பேர் மீட்பு, குழந்தைகள், 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு உதவி - இரயில்வே போலீசாரின் மகத்தான பணி.!
Rescued 2178 people from kidnappers helped 65 thousand people railway police
இந்திய ரெயில்வேயில் நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். இதில் கடத்தல்காரர்கள் தங்களிடம் சிக்கும் நபர்களை குறைந்த செலவில் அதிக தொலைவுக்கு கடத்தி செல்வதற்கு ரெயில்வேயை பயன்படுத்தி கொள்கின்றனர்.
இதனை தடுப்பதற்காக ரெயில்வே பாதுகாப்பு படையினர் திறமையாக செயல்பட்டு வரும் நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் கடத்தல்காரர்களிடம் இருந்து 2,178 பேரை மீட்டுள்ளனர். குழந்தைகள், மகளிர் மற்றும் ஆடவர் என 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு உதவிகளை வழங்கியுள்ளனர்.
கடந்த ஜூலை மாதம் சிறப்பு ஒரு மாத கால மனித கடத்தல் தடுப்பு நடவடிக்கையை ரெயில்வே பாதுகாப்பு படையினர் மேற்கொண்டனர். இதற்காக அந்தந்த மாநில காவல்துறையினருடன் இணைந்து ரெயில்வே பாதுகாப்பு படையினர் பணிபுரியும்படி அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
இதன்படி, ரெயில்வே பாதுகாப்பு படையினர், கடத்தல்களை கண்டறிவது மற்றும் கடத்தல் வழக்குகள் பற்றிய தகவல்கள் கிடைத்தவுடன் உடனுக்குடன் செயலாற்றுவது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டனர். கடத்தல்காரர்களிடம் இருந்து 186 பேரை மீட்டு உள்ளனர். மேலும், இதில் தொடர்புடைய கடத்தல்காரர்கள் 47 பேரை கைது செய்துள்ளனர்.
English Summary
Rescued 2178 people from kidnappers helped 65 thousand people railway police