அசாம் தேசிய பூங்காவில் சுற்றுலாப்பயணிகள் வாகனத்தை துரத்திய காண்டாமிருகம்.!
rihno chase to touristers vechicle in assam national park
அசாம் மாநிலத்தில் உள்ள காசிரங்கா தேசியப் பூங்கா மற்றும் புலிகள் காப்பகத்திற்கு வந்த சுற்றுலா பயணிகள் வந்த வாகனத்தை ஒற்றைக் கொம்பு கொண்ட காண்டாமிருகம் ஒன்று துரத்தியது. இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
இந்த ஒற்றைக் கொம்பு கொண்ட காண்டாமிருகம் வாகனத்தின் பின்னால் துரத்துவதை பார்த்த சுற்றுலாப் பயணி ஒருவர் வலைதளத்தில் பதிவிட்டுள்ள வீடியோவில் தெரிவித்திருப்பதாவது, "காண்டாமிருகம் தங்களுடைய வாகனத்தை சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு துரத்தியது" என்று குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக காசிரங்கா தேசிய பூங்காவின் வனத்துறை அதிகாரி, ரமேஷ் கோகோய் தெரிவித்ததாவது, "இந்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமையன்று மாலை பூங்காவின் பகோரி மலைத்தொடரில் நடந்துள்ளது. காண்டாமிருகம் துரத்தியதில் யாருக்கும் எந்தவிதமான காயமும் ஏற்படவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
அசாம் மாநிலத்தின் காசிரங்கா தேசிய பூங்கா மற்றும் புலிகள் காப்பகத்தில் மொத்தம் காண்டாமிருகங்களின் எண்ணிக்கை 2613. இதில் 866 ஆண்கள், 1049 பெண்கள் மற்றும் 146 கன்றுகள் உள்ளன. மேலும், கடந்த 4 ஆண்டுகளில் ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்களின் எண்ணிக்கை 200 ஆக அதிகரித்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
English Summary
rihno chase to touristers vechicle in assam national park