பெங்களூரில் அதிபயங்கர விபத்து! கார் மீது கண்டெய்னர் மோதி 6 பேர் பலி!
Road Accident container lorry bangalore
பெங்களூரு அருகே நடந்த பயங்கர விபத்தில் 6 பேர் பலியாகினர். கார் மீது கண்டெய்னர் லாரி கவிழ்ந்ததால் இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த அதிபயங்கர விபத்தில், சொகுசு காரில் பயணம் செய்த 5 பேரும், இரு சக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் உட்பட மொத்தம் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
அதிக வேகத்தில் வந்த இரண்டு லாரிகள், இரண்டு கார்கள் மற்றும் ஒரு பள்ளி பேருந்து ஒன்றுடன் மோதியதில் தொடர் விபத்து ஏற்பட்டது.
இதில், கண்டெய்னர் லாரி கார் மீது கவிழ்ந்து பெரிய சேதத்தை ஏற்படுத்தியது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், விபத்தில் சிக்கியவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
இந்த அதிபயங்கர விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விபத்தின் காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
English Summary
Road Accident container lorry bangalore