வயநாடு நிலச்சரிவை அதி தீவிர பேரிடராக அறிவிக்க மத்திய அரசு ஒப்புதல்.!
central government approvel wayanad landslide major disaster
கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் 30-ம் தேதி பெய்த கனமழை காரணமாக திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 400-க்கும் அதிகமானோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த நிலச்சரிவால் கேரள மட்டுமின்றி, ஒட்டுமொத்த நாடும் கடும் துயரத்திற்கு உள்ளானது. வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்காக பல்வேறு மாநில அரசுகள் நிதியுதவிகளை அளித்தன. தமிழ்நாடு அரசு 5 கோடி ரூபாய் நிதியுதவி அளித்தது.
இதற்கிடையே, கேரளா அரசு வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. ஆனால், அதனை ஏற்க மத்திய அரசு மறுத்து வந்தது. இந்த நிலையில், வயநாடு நிலச்சரிவை அதி தீவிர பேரிடராக அறிவிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இது குறித்து கேரள அரசுக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது. எனினும் பேரிடராக அறிவித்த மத்திய அரசு கேரள மாநிலத்திற்கான சிறப்பு நிதியுதவி குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
English Summary
central government approvel wayanad landslide major disaster