சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்ற சிறுமிக்கு நேர்ந்த சோகம்: பெற்றோர் அதிர்ச்சி தகவல்! - Seithipunal
Seithipunal


சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் வழியில் தமிழகத்தைச் சேர்ந்த சிறுமி நேற்று மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தை சேர்ந்த பத்மஸ்ரீ என்ற சிறுமி தனது உறவினர்களுடன் நேற்று சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்றார். 

கோவிலுக்கு செல்லும் வழியில் அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக அந்த பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். 

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக சிறுமியின் குடும்பத்தினர், சிறுமிக்கு ஏற்கனவே மூச்சுத் திணறல் போன்ற பல்வேறு பிரச்சனைகள் இருந்ததாக தெரிவித்தனர். 

இதனை அடுத்து போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sabarimala Ayyappan temple girl died


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->