பாஜக அணையப்போகும் விளக்கு! அணைக்க வேலைக்கு நடந்து வருகிறது! அதிரடி காட்டும் அகிலேஷ்! - Seithipunal
Seithipunal


பாஜக என்பது விரைவில் அணையப்போகும் விளக்கு என சமாஜ்வாஜ் கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டத்தில் இடம்பெற்றுள்ள சமாஜ்வாஜ் கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று எம்பியாக தேர்வானார். எம்பியாக தேர்வானதால் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.

மக்களவை தேர்தலில் உத்தரபிரதேசத்தில் அதிக தொகுதிகளை கைப்பற்றி பாஜகவிற்கு பேர் அதிர்ச்சி கொடுத்தார். உத்தர பிரதேசத்தில் ராமர் கோவில் அமைந்துள்ள அயோத்தி நாடாளுமன்ற தொகுதியில் பாஜக தோல்வி அடைந்தது என்பது குறிப்பிட தக்கது. அகிலேஷ் யாதவ்வின் குடும்பத்தில் மனைவி மற்றும் உறவினர்கள் என ஐந்து பேர் எம்பி யாக தேர்வாகியுள்ளனர்.

பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்று முதலாவது பட்ஜெட் கூட்ட தொடர் நேற்று தொடங்கியது. இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்ததாவது,

நீட் தேர்வு முறைகேடு, வினாத்தாள் கசிவு, உத்தர பிரதேசத்தில் கன்வர் யாத்திரை அதிரை வழித்தடத்தில் உள்ள கடைகளின் உரிமையாளர்கள் பெயரை குறிப்பிட பாஜக அரசு உத்தரவு வெளியிட்டவற்றை அகிலேஷ் யாதவ் கடுமையாக சாடினார்.

பாஜகவின் பிரிவினை அரசியலை  மக்கள் ஏற்கனவே புறக்கணித்துவிட்டனர். விரைவில் ஆணைய போவதற்கு முன் விளக்கு பிரகாசமாக எரிவதைப் போல் பாஜக தற்போது எரிந்து கொண்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Samajwadi Party chief Akhilesh Yadav says BJP is a lamp that will go out soon


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->