ஒரே கிளிக் மொத்தமும் போச்சு.. வங்கியிலிருந்து போன் கால் வந்தா உஷார்..!! - Seithipunal
Seithipunal


சமீப காலங்களில் தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வங்கி மோசடிகள் அரங்கேற்றப்படுவது அதிகரித்து காணப்படுகிறது. வங்கியில் இருந்து பேசுவதாக கூறி வாடிக்கையாளர்களின் சுய விவரங்களை பெற்று அதன் மூலம் அவர்களுடைய வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்படுகிறது.

அவ்வாறாக மும்பையில் தனியார் வங்கி வாடிக்கையாளர்களுக்கு எஸ்எம்எஸ் ஒன்றை அனுப்பிய ஆன்லைன் மோசடி கும்பல் தங்களின் முகவரி மற்றும் பேன் எண் போன்ற தகவல்களை தரவில்லை என்றால் வங்கி கணக்கை முடக்கி விடுவோம் என மிரட்டி உள்ளனர்.

அதற்காக அவர்கள் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பிய இணையதள லிங்கை உண்மையான நம்பி வாடிக்கையாளர்கள் அதனை கிளிக் செய்து சுய விவரங்களை பதிவிட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்ட ஒரு பெண் தான் வங்கி மேலாளர் பேசுவதாக அறிமுகப்படுத்திக் கொண்டு ஓடிபி என்னை பதிவு செய்து கொள்கிறார். 

அதனைத் தொடர்ந்து வாடிக்கையாளர்கள் கணக்கிலிருந்து பணம் எல்லாம் மாயமாகியுள்ளது. இவ்வாறு நூதன முறையில் 40-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளரிடம் இருந்து பல லட்சக்கணக்கான பணம் சுருட்டப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வாடிக்கையாளர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்கள். இது குறித்து வழக்கு பதிவு செய்த மும்பை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வங்கியில் இருந்து பேசுவதாக கூறி அவர்கள் அனுப்பும் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பும் லிங்கை கிளிக் செய்தால் தங்களின் சுய விவரங்கள் அனைத்தும் திருடப்பட்டு ஏமாற்றப்படுவீர்கள் என மும்பை போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Scamming bank customers by call from bank in mumbai


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->