கனமழை எதிரொலி - 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை.!
school and colleges holiday due to heavy rain in kerala
நமது அண்டை மாநிலமான கேரளாவில் பருவமழையை முன்னிட்டு பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதற்கிடையே, கேரளாவில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.
இந்த நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில், கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும். மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு உள்ளிட்ட மாவட்டங்களில் ஆரஞ்சு எச்சரிக்கையும், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர் மற்றும் பாலக்காடு உள்ளிட்ட மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.
school holidays to 8 distritc
இதனை முன்னிட்டு, கண்ணூர், கோழிக்கோடு, வயநாடு, பாலக்காடு, திருச்சூர், இடுக்கி, ஆலப்புழா மற்றும் கோட்டயம் உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில் உள்ள அனைத்து கல்வி மையங்களுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திட்டமிடப்பட்ட தேர்வுகளில் எந்தவித மாற்றங்களும் இருக்காது என்று மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.
கனமழையை தொடர்ந்து, கேரளா, கர்நாடகா மற்றும் லட்சத்தீவு உள்ளிட்ட கடலோர பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.
English Summary
school and colleges holiday due to heavy rain in kerala