காவி நிறத்திற்கு மாறும் அரசு பள்ளி கட்டிடங்கள் - காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


ஒடிசாவில் ஆட்சி செய்து வரும் பிஜு ஜனதா தளம் கட்சியின் கொடி பச்சை நிறத்தில் இருக்கும். இதனால் ஒடிசா மாநிலத்தில் உள்ள அரசு கட்டிடங்கள் பச்சை நிறத்தில் காட்சியளித்தன.

அதாவது ஒடிசா மாநிலத்தில் அரசின் அதிகாரப்பூர்வ கட்டிங்கள் உள்பட அனைத்து அரசு பள்ளிகள் மற்றும் அரசு கட்டிடங்கள் பச்சை நிறத்தில் தான் காட்சியளித்தன. கடந்த ஆண்டு மக்களவை தேர்தலுடன் ஒடிசா மாநில சட்டமன்ற தேர்தலும் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.

அப்போதில் இருந்து பச்சை நிறம் மெல்லமெல்ல மறைந்து வருகிறது. முதலில் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவ- மாணவிகளின் சீருடை நிறம் பச்சையில் இருந்து லைட் பிரவுன் மற்றும் மெரூன் நிறங்களுக்கு மாறியது.

இதைத் தொடர்ந்து தற்போது அரசு பள்ளிக்கூடங்களில் அடர்ந்த ஆரஞ்ச் நிறம் பார்டர் உடன் லைட் ஆரஞ்ச் நிறமாக மாற்ற வேண்டும் என ஒடிசா பள்ளி கல்வி திட்ட ஆணையம் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு கடிதம் எழுதியுள்ளது.

அரசின் உத்தரவால் பச்சை நிறமாக காட்சியளித்து வந்த அரசு பள்ளிக்கூடங்கள் இனிமேல் காவி நிறமாக காட்சியளிக்க உள்ளது. பாஜக அரசின் இந்த முடிவு, கல்வியை காவிமயமாக்கும் முயற்சியின் ஒரு பகுதி என்று எதிர்க்கட்சியான பிஜு ஜனதா தளம் குற்றம்சாட்டியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

school buildings colour change in odisa


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->