அரசு பள்ளி மாணவர்களின் உணவில், பாம்பு.! 30 பேருக்கு நிகழ்ந்த சோகம்.!
School food snake in bhihar
பீகார் மாநிலத்தில் உள்ள பார்பிஸ்கஞ்ச் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்பட்டு வருகின்றது. நேற்று முன்தினம் அந்த மாணவர்களுக்கு உணவாக கிச்சடி வழங்கப்பட்டது. அப்போது ஒரு மாணவனுக்கு கொடுக்கப்பட்ட சாப்பாட்டில் பாம்பு இருந்துள்ளது.
100க்கும் மேற்பட்ட மாணவர்கள் சாப்பிட்ட இந்த உணவில் பாம்பு இருந்தது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு உணவு பரிமாறுவது நிறுத்தப்பட்டது. இதற்குள் சாப்பிட்ட சில மாணவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
இதில் சில மாணவர்கள் வாந்தி எடுக்க துவங்கிய நிலையில் பாதிக்கப்பட்ட மாணவர்களை அருகில் இருந்த மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று அனுமதித்தனர். இதில் 30-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் கல்வி அலுவலர்கள் மற்றும் டிஎஸ்பி உள்ளிட்டோர் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு இந்த உணவுகளை தயாரித்த தனியார் என் ஜி ஓக்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் பற்றி தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவர்கள் உறுதி அளித்துள்ளனர். பள்ளியில் பரிமாறப்பட்ட சத்துணவை சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல் நல குறைவு ஏற்பட்ட சம்பவம் பெற்றோர் மத்தியில் கொந்தளிப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
School food snake in bhihar