காதலனுக்காக குடுமிப்பிடி சண்டை போட்ட தனியார் பள்ளி மாணவிகள்.. வைரலாகும் வீடியோ.! - Seithipunal
Seithipunal


தனியார் பள்ளியை சேர்ந்த மாணவிகள் சாலையில் குடுமியை பிடித்து சாலையில் கட்டிப்புரண்டு சண்டை போட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவில் உள்ள புகழ்பெற்ற தனியார் பள்ளி மாணவிகள் இரு பிரிவாகப் பிரிந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் சிறிது நேரத்தில் மாணவிக்கு இடையே
 கைகலப்பு ஏற்பட்டது.

அனி தொடர்ந்து மாணவிகள் கையிலிருந்த பேஸ்பால் மட்டையை கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வதும், இரும்புக் கதவுகளின் தலையை கொண்டிருக்கும் போது செய்வதும் என சற்றே கொடூரமாக சண்டையிட்டனர்.

இந்த சண்டையில் மாணவிகள் சிலருக்கு ரத்தம் வழிகிறது. மேலும் சண்டை உச்ச கட்டத்திற்கு செல்லும் நிலையில் அங்கிருந்த சில மாணவர்கள், மாணவிகளின் சண்டையை ஒருவழியாக தடுத்தனர்.

இந்த சண்டைக்கான சரியான காரணம் முழுமையாக தெரியவில்லை. மேலும் இந்த மோதல் விவகாரம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்படவில்லை. சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகமும் எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லை, யார் மீதும் நடவடிக்கை எடுத்ததாகவும் தெரியவில்லை.

எனினும் மாணவ மாணவிகளிடம் இருந்து கிடைத்த தகவலின்படி காதலனுக்காக மாணவிகள் சண்டை போட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. அதாவது மாணவி ஒருவரின் காதலனை மற்றொரு மாணவி வெளியே அழைத்துச் சென்று ஊர் சுற்றி வந்துள்ளார்.

இந்த விவகாரம் காதலிக்க தெரியவரவே தனது ஆதரவாளர்களுடன் சென்று கேட்டதில் வாய்த்தகராறாகி மோதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. தற்போதைய இதுகுறித்து வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

School girls fight in Bangalore


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->