தாறுமாறாக ஓடிய தனியார் பேருந்து - பரிதாபமாக உயிரிழந்த பள்ளி மாணவி.!
school student died for accident in karnataga
தாறுமாறாக ஓடிய தனியார் பேருந்து - பரிதாபமாக உயிரிழந்த பள்ளி மாணவி.!
கர்நாடக மாநிலத்தில் உள்ள சிக்கமகளூரு மாவட்டம் சீதாபுரத்தை சேர்ந்தவர்கள் மஞ்சு – லதா தம்பதியினர். இவர்களுக்கு பதினான்கு வயதில் துளசி என்ற மகள் உள்ளார். இவர் தனது தோழி நிவேதிதா உள்ளிட்டோருடன் பள்ளி செல்வதற்காக பேருந்துக்காக காத்திருந்தனர்.
அப்போது, அதிவேகமாக வந்த தனியார் பேருந்து ஒன்று திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி சாலையோரம் நின்று கொண்டிருந்த மாணவிகள் மற்றும் பொதுமக்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த மாணவி துளசி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், துளசிக்கு அருகே நின்று கொண்டிருந்த சக மாணவிகள் பலத்த காயமடைந்தனர்.
இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அதன் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் துளசியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே அப்பகுதி மக்கள் விபத்தை ஏற்படுத்திய பேருந்தை அடித்து நொறுக்கியுள்ளனர்.
இதனைத் தடுத்து நிறுத்திய போலீசார் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து பேருந்து ஓட்டுநரை கைது செய்து சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பேருந்து மோதி பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
school student died for accident in karnataga