உ.பியில் கொடூரம் - சிறுமியின் வாயில் சானிடைசரை ஊற்றிய கும்பல் - போலீசார் வலைவீச்சு.! - Seithipunal
Seithipunal


உ.பியில் கொடூரம் - சிறுமியின் வாயில் சானிடைசரை ஊற்றிய கும்பல் - போலீசார் வலைவீச்சு.!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பரேலி பகுதியைச் சேர்ந்த பதினொன்றாம் வகுப்பு மாணவி ஒருவர், கடந்த 27-ம் தேதி வழக்கம் போல் பள்ளிக்குச் சென்று விட்டு வீட்டிற்குத் திரும்பி வந்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த சிறுமியை நான்கு இளைஞர்கள் தடுத்து நிறுத்தி நடுரோட்டில் அவரை பலாத்காரம் செய்ய முயற்சி செய்தனர்.

ஆனால், அந்த மாணவி அந்தக் கும்பலிடமிருந்து தப்பித்துச் செல்ல முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல், வலுக்கட்டாயமாக அந்த சிறுமியின் வாயில் சானிடைசரை ஊற்றியுள்ளனர். அது மட்டுமல்லாமல், இந்த சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களிலும் பதிவேற்றம் செய்துள்ளது. 

இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அந்த மாணவியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே இந்தச் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை, காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

இந்த நிலையில், பள்ளி மாணவி நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகள் நான்கு பேரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

school student died in uttar pradesh


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->