லக்கி பாஸ்கர் படம் பார்த்துவிட்டு எஸ்கேப் ஆன பள்ளி மாணவர்கள் - நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


விசாகப்பட்டினத்தில் நான்கு பள்ளி மாணவர்கள் மாயமாகியுள்ள அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. 

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு விடுதியில் தங்கிப் படிக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் நான்கு பேர் நேற்று துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான லக்கி பாஸ்கர் படத்தை பார்த்துள்ளனர்.

அதில் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவராக இருக்கும் துல்கர் சல்மான், இறுதியில் கார், வீடு என்று பெரிய செல்வந்தராக மாறியிருப்பார். இது அந்த மாணவர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதனால், அந்த மாணவர்கள் தாங்களும் வீடு, கார் வாங்கிவிட்டு வருவதாக நண்பர்களிடம் கூறி விட்டு விடுதியில் இருந்து தப்பியோடியுள்ளனர். 

இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியானதையடுத்து, அவர்கள் காணாமல் போனதை அறிந்த அவர்களது பெற்றோர்கள் போலீசில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து ரெயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

'லக்கி பாஸ்கர்' படம் பார்த்து பள்ளி மாணவர்கள் விடுதியில் இருந்து தப்பியோடிய சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

school student escape after watch lucky baskhar movie


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->