நண்பர்களிடையே தகராறு - சக மாணவனை கொலை செய்த கொடூரம்.! - Seithipunal
Seithipunal


ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஹசாரிபாக் மாவட்டம் தனியார் பள்ளி ஒன்றில் 11ம் வகுப்பு பயின்று வந்த மாணவர் ஒருவர் கடந்த 6-ம் தேதி சக மாணவர்களுடன் வெளியே சென்றுள்ளார். ஆனால், அதன் பிறகு அவர் வீடு திரும்பாத நிலையில், பல இடங்களிலும் பெற்றோர் தேடித் வந்தனர். 

இருப்பினும் அவர் கிடைக்காததால் பெற்றோர் சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் படி போலீசார் வழக்குப் பதிவு செய்து மாணவரை தீவிரமாக தேடி வந்த நிலையில், ஆறு நாட்களுக்குப் பிறகு மாணவரின் உடல் அதே பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டது. 

இதையடுத்து, போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை செய்ததில், சக மாணவர்கள் இருவர் மீது சந்தேகம் ஏற்பட்டதால், அவர்களை தனியாக பிடித்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அதில் மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை நடந்துள்ளதும், விசாரணையை திசை திருப்புவதற்காக உயிரிழந்த மாணவரின் உடலை கிணற்றில் வீசியதும், தெரியவந்துள்ளது. 

இதையடுத்து போலீசார் சம்பவம் குறித்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். சக மாணவனை மாணவர்களே கொலை செய்து கிணற்றில் வீசி உள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

school student murder in jarkhant


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->