சுட்டெரிக்கும் வெயில்..இன்று முதல் பள்ளிகளின் நேரம் மாற்றம்.. பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு.!
Scorching sun to school timing change in odisha
ஒடிசா மாநிலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகளின் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கடும் வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக வடமாநிலங்களில் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக ஏற்படும் வெப்பத்தின் தாக்கத்தால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்த நிலையில் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக ஒடிசாவில் உள்ள பள்ளிகள் செயல்படும் நேரம் மாற்றப் படுவதாக ஒடிசா மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.
அதன்படி இன்று முதல் காலை 6 மணி முதல் 9 மணி வரை மட்டுமே வகுப்புகள் நடைபெறும் என ஒடிசா மாநில கல்வித்துறை தெரிவித்துள்ளது.
அதனைத்தொடர்ந்து, பஞ்சாப் மாநிலத்திலும் அனைத்து தொடக்கப் பள்ளிகளும் காலை 7 மணி முதல் 11 மணி வரை செயல்படும் எனவும், நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை வகுப்புகள் காலை 7 மணிக்கு தொடங்கி மதியம் 12.30 மணி வரை தொடரும் என்றும் மே 14 முதல் ஜூன் 30 வரை பள்ளிகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆன்லைன் வகுப்புகள் மே 16 முதல் மே 31, 2022 வரை நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Scorching sun to school timing change in odisha