#பெங்களூர் || சட்டவிரோதமாக பதுக்கிய ரூ.1¼ கோடி இ-சிகரெட் பறிமுதல் - 2 பேர் கைது - Seithipunal
Seithipunal


பெங்களூருவில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1¼ கோடி மதிப்பிலான இ-சிகரெட்டை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் சட்டவிரோதமாக இ-சிகரெட்டுகள் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து போலீசார் அல்சூர்கேட் காவல் எல்லைக்குட்பட்ட கும்பாரபேட்டை பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தின் குடோனின் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் குடோனில் இ-சிகரெட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதையடுத்து இ-சிகரெட்டுகளை சட்ட விரோதமாக பதுக்கி வைத்து விற்பனை செய்தது சித்தலிங்கா(30), சச்சின் சவுத்ரி (23) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, ரூபாய்1¼ கோடி மதிப்பிலான இ-சிகரெட்டை பறிமுதல் செய்த போலீசார், அவர்கள் இரண்டு பேரையும் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து அவர்கள் இரண்டு பேரும் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், இதுகுறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Seizure of illegally hoarded e cigarettes in bangalore


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->