கள்ளச்சாராயம் குடித்து 7 பேர் பலி - பீகாரில் பரபரப்பு சம்பவம்.! - Seithipunal
Seithipunal


பீகார் மாநிலத்தில் உள்ள மேற்கு சம்பரன் மாவட்டத்தில் தொடர்ந்து 7 பேர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடத்தியதில் உயிரிழந்தவர்கள் கள்ளச்சாராயம் குடித்து பலியானதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இருப்பினும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:- "முதல் மரணம் கடந்த 15ம் தேதி நிகழ்ந்தது. 

ஆனால் இன்றுதான் இந்த சம்பவம் குறித்து எங்களுக்குத் தெரியவந்தது. மீதமுள்ள 5 மரணங்களுக்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை. ஏனென்றால் ஏழு உடல்களும் போலீசாருக்கு தகவல் தெரிவிப்பதற்கு முன்பே தகனம் செய்யப்பட்டன. 

இதற்கான காரணத்தைக் கண்டறிய நாங்கள் ஒரு குழு ஒன்றை அமைத்துள்ளோம். இந்த சம்பவம் குறித்து விசாரணைக் குழு 24 மணி நேரத்திற்குள் தனது அறிக்கையை சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

seven peoples died for drink fake liquor in bihar


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->