நதியில் மிதந்து வந்த பீரங்கி குண்டு - நொடியில் நடந்த கொடூரம்.! - Seithipunal
Seithipunal


நதியில் மிதந்து வந்த பீரங்கி குண்டு - நொடியில் நடந்த கொடூரம்.!

சிக்கிம் மாநிலத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளத்தில் இந்திய ராணுவத்திற்கு சொந்தமான முகாம் ஒன்று அடித்து செல்லப்பட்டது. இந்த முகாமில் வைக்கப்பட்டிருந்த சிறு பீரங்கிகளில் பயன்படுத்தும் வெடிகுண்டுகள், துப்பாக்கிகள், தோட்டாக்கள் உள்ளிட்ட அனைத்தும் ஆற்றில் மிதந்து சென்றது. 

அப்படி வந்தால் அதனை யாரும் எடுக்க வேண்டாம் என்று சிக்கிம் மாநில அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில் மேற்குவங்க மாநிலத்தில் ஜல்பைகுரி மாவட்டத்தில், நேற்று மாலை சிறுவர்கள் சிலர் விறகுகள் சேகரிப்பதற்காக தீஸ்தா நதி அருகே சென்றுள்ளனர். 

அப்போது, ஆற்றில் மிதந்து வந்த பீரங்கி குண்டை அவர்கள் வீட்டுக்கு எடுத்து வந்துள்ளனர். அதனை அவர்கள் பார்த்துக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக அந்த வெடிகுண்டு வெடித்துள்ளது. இந்த விபத்தில், சாகினூர் ஆலம் என்கிற 7 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும், 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். 

அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து தீஸ்தா நதியிலிருந்து கிடைக்கும் எந்த பொருட்களையும் எடுக்க வேண்டாம் என்று ராணுவமும் மாநில அரசும் எச்சரிக்கை விடுத்து வருகின்றன. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

seven years old boy died for army bomb explossion


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->