கொடுரம் :  பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 13 வயது சிறுமியை, பாலியல் வன்கொடுமை போலீஸ் அதிகாரி.! - Seithipunal
Seithipunal


உத்தர பிரதேச மாநிலத்தில், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 13 வயது சிறுமியை, போலீஸ் அதிகாரி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

உத்தர பிரதேசம் மாநிலம் : கடந்த ஏப்ரல் மாதம் 22-ம் தேதி அன்று 13 வயது சிறுமி ஒருவரை மர்ம கும்பல் ஒன்று போபாலுக்கு கடத்தி பலாத்காரம் செய்துள்ளது. பின்னர், அந்த சிறுமியை அவரது கிராமத்தில் இறக்கிவிட்டு அந்த மர்ம நபர்கள் தப்பிச் சென்றுள்ளது.

கூட்டு பாலியல் வண்டுமையால் பாதிக்கப்பட்ட சிறுமி, தனக்கு நடந்த கொடூரத்தை அவரது தந்தையிடம் சொல்லி அழுதுள்ளார்.

இதனையடுத்து, சிறுமி மற்றும் அவரின் உறவினர்கள் லலித்பூரில் உள்ள காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க சென்றனர்.

அதனை தொடர்ந்து, சிறுமியிடம் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக மறுநாள் காவல் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டார். அப்போது, காவல் நிலையப் பொறுப்பாளர் அதிகாரி திலக்தாரி சரோஜ் என்ற கொடூரன்,  சிறுமியை காவல் நிலையத்திற்குள் அழைத்துச் சென்று அங்கு மீண்டும் பலாத்காரம் செய்ததாக சொல்லப்படுகிறது.

இதனையடுத்து, குற்றம்சாட்டப்பட்ட அதிகாரி திலக்தாரி சரோஜ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, அவர் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 4 பேரை போலீசார் தேடி வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sexually abused 13year old girl again abused a police officer


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->