ஆளுநருக்கு எதிராக பேனர் - களமிறங்கிய மாணவர் சங்கம்.!
SFI students bannar against kerala governor
கேரளா மாநிலத்தில் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு நிறைவேற்றப்பட்ட பல்வேறு சட்டதிருத்த மசோதாக்களை ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் தவிர்த்து வருகிறார். இது தொடர்பாக ஆளுநர் ஆரிஃப் முகமது கானுக்கும், கேரள முதல்வருக்கும் இடையேயான மோதல் போக்கு நீடித்து வருகிறது.
மேலும், அவருக்கு எதிராக சிபிஎம் கட்சியின் மாணவ அமைப்பான எஸ்.எப்.ஐ மாநிலம் முழுவதும் உள்ள பல்கலை கழகம் மற்றும் கல்லூரிகளில் பேனர் வைப்பதாக அறிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் எஸ்.எப்.ஐ அமைப்பினர், அரசு சமஸ்கிருத கல்லூரிக்கு வெளியே மற்றும் ஆளுநர் தங்கியுள்ள பல்கலை கழகத்தின் விருந்தினர் மாளிகை அருகிலும் ஆளுநருக்கு எதிராக பேனர் வைத்துள்ளனர். இந்த பேனரை போலீஸார் உடனடியாக அகற்றினர். இதனால் ஆளுநர் தரப்புக்கும், ஆளும் தரப்புக்கும் இடையேயான மோதல் போக்கும் முற்றியுள்ளது.
English Summary
SFI students bannar against kerala governor