டெல்லியில் அதிர்ச்சி!...பூஜ்ஜியமாக குறைந்த பார்வைத் திறன்!...விமானப் பயணிகளின் கதி என்ன? - Seithipunal
Seithipunal


தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில்,  கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் காற்று தரக் குறியீடு 366 ஆக பதிவாகியுள்ளதாக மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

மேலும், டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமான பிரிவில் இருந்ததால், பல்வேறு பகுதிகள் புகை மூட்டமாக காணப்பட்டது.  இதன் காரண்மாக, வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சுவாச பிரச்சினை, சரும நோய்கள் உள்ளிட்ட  பாதிப்புகளுக்கு ஆளாகி உள்ளனர்.

இந்த நிலையில், டெல்லியில் உள்ள  இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் காலை 8.30 மணிக்கு விமான ஓடுபாதையில் பார்வைத்திறன் பூஜ்ஜியமாக குறைந்தது. இதனால்  ஒரு சில விமானங்கள் தரையிறங்காமல் திருப்பி விடப்பட்டதால், அங்கு விமான சேவை பாதிக்கப்பட்டது.

மேலும், ஆனந்த் விஹார் மற்றும் ஆயா நகர் ஆகிய  கண்காணிப்பு நிலையங்களில் காற்றின் தரம் கடுமையான பிரிவில் பதிவானதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Shock in delhi low vision blind passengers in front of airplane


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->