மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சி!....ஆண் நண்பருடன் ரீல்ஸ் எடுக்க சென்ற பெண் பாலியல் பலாத்காரம்!....2 பேர் கைது! - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேசத்தில் ஆண் நண்பருடன் ரீல்ஸ் எடுக்கச் சென்ற இளம்பெண் ஒருவர், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சசியை ஏற்படுத்தியுள்ளது.


நம் அன்றாடம் வாழும் உலகில் நாளுக்கு நாள் பரிமாணம் வளர்ச்சி அடைவதோடு, தொழில்நுட்பமும் வளர்ந்து வருகிறது. அதிலும் குறிப்பாக கொரோனா பெருந்தொற்றிற்கு பின்னர் உலகில் எங்கு சென்றாலும் அனைவரது கைகளிலும் செல்போன்கள் வைத்து இருப்பதை  மறுக்க முடியாத அளவிற்கு செல்போன்ன்களின் தொழில்நுட்பம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

மேலும் செல்போனை வைத்து எப்படியாவது ரீல்ஸ் செய்து அனைவரது மத்தியிலும் பிரபலமாக ஆசைப்படுபவர்களின் எண்ணிக்கை ஏராளம். இந்த நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர், ரீல்ஸ் வீடியோ எடுப்பதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது ஆண் நண்பருடன் இந்தூரின் புறநகர் பகுதிக்குச் சென்றுள்ளார். அப்போது அந்த இளம்பெண்ணை 2 நபர்கள் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பான புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார்,  2 குற்றவாளிகளை  நேற்று கைது செய்துள்ளனர். மேலும் அவர்கள் 2 பேரும் இளம்பெண்ணின் நண்பருக்கு தெரிந்தவர்கள் என்பது தற்போது தெரியவந்துள்ளதாகவும், அந்த பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Shock in Madhya Pradesh Woman who went to pick up reels with a male friend was raped 2 people arrested


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->