பெங்களூரு கட்டட விபத்தில் அதிர்ச்சி தகவல் வெளியீடு!....கட்டிட உரிமையாளர் 2 பேர் அதிரடி கைது! - Seithipunal
Seithipunal



இந்தியாவில் தென்மேற்கு பருவமழை நிறைவடைந்துள்ள நிலையில். தமிழகம், கர்நாடகம், ஆந்திரா உள்ளிட்ட  மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. இந்த ஆண்டில் பருவமழையின்  தொடக்கத்தில் இருந்தே மழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் கொடுக்கப்பட்டது.

இதற்கிடையே கர்நாடக மாநிலம், தலைநகர் பெங்களூருவில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இந்த நிலையில், அங்குள்ள பாபுசபாளையவில் கட்டுமானத்தில் இருந்த 6 மாடி கட்டடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை இந்த சம்பவத்தில் 5 பேர் பலியாகி இருந்த நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. மேலும்,காயமடைந்தவர்கள்  மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருவதாகவும், சிலர் கட்டடத்தில் சிக்கி இருக்கலாம் என்று  தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில், 4 மாடிகள் கட்ட அனுமதி பெற்று 7 மாடிகள் கட்டியது தொடர்பாக கட்டிட உரிமையாளர் முனிராஜ் , அவரது மகன் மோகன் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Shocking information release in bengaluru building accident 2 building owners arrested


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->