கடந்த 24 மணி நேரத்தில் 7 குழந்தைகள் மரணம்.. மாநிலத்தையே உலுக்கிய சம்பவம்.! - Seithipunal
Seithipunal


மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் கடந்த 24 மணி நேரத்தில் மூச்சுத்திணறல் காரணமாக 7 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்குவங்க மாநிலத்தில் சமீப சில நாட்களாக அடினோ வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கொல்கத்தாவில் உள்ள 2 அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 5 குழந்தைகளும், பங்குரா சம்மிலானி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 2 குழந்தைகளும் இறந்துள்ளனர். 

குழந்தைகள் நுரையீரல் தொற்றால் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளது. ஆனால், குழந்தைகள் உயிரிழந்ததற்கான காரணம் அடினோ வைரஸ் தான் என்று உறுதியாக கூற முடியவில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

மேலும் உயிரிழந்த 7 குழந்தைகளுக்கும் நிமோனியா எனப்படும் நுரையீரல் அழற்சியால் இறந்திருக்கவும் வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த நோய் தொற்றுகள் குறித்த அவசர உதவிக்கு 24x7 அவசர உதவி எண் 1800 313444 222 - ஐ அரசு அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Shocking Report 7 Babies died in 24 Hours In West Bengal


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->