நாங்கள் இந்துத்துவத்தை அவதிமதிக்கவில்லை - உத்தவ் தாக்கரே.! - Seithipunal
Seithipunal


நேற்று நடைபெற்ற ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இந்து கடவுளான சிவன் படத்தைக் காட்டி தனது உரையைத் தொடங்கினார். மேலும், பா.ஜ.க.வினர் உண்மையான இந்துக்கள் இல்லை. தங்களை இந்துக்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் 24 மணி நேரமும் "வன்முறையிலும் வெறுப்பிலும்" ஈடுபடுகிறார்கள். 

பா.ஜ.க.வினர் ஒட்டுமொத்த இந்துக்களின் பிரதிநிதிகள் இல்லை என்று தெரிவித்தார். இவரது பேச்சுக்கு பா.ஜ.க.வினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், ராகுல் காந்தி இந்துத்துவத்தை அவமதிக்கவில்லை என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில்,

"ராகுல் காந்தியின் பேச்சைக் கேட்டேன். ராகுல் காந்தி உள்பட நாங்கள் யாரும் இந்துத்துவத்தை அவமதிக்க மாட்டோம், இந்துத்துவத்தை அவமதிப்பதை ஏற்றுக்கொள்ளவும் மாட்டோம். பா.ஜ.க. என்பது இந்துத்துவம் இல்லை என ராகுல் காந்தி கூறினார். நான் பா.ஜ.க.வை கைவிட்டுவிட்டேன், இந்துத்துவத்தை அல்ல என்பதை மிகத் தெளிவாகக் கூறியுள்ளேன்.

ராகுல் காந்தி மக்களவையில் சிவபெருமானின் படத்தை காட்ட முயன்றார். ஆனால் அதுவும் தடை செய்யப்பட்டது. இதுதான் இந்துத்துவமா? ராகுல் காந்தி இந்துத்துவத்தை அவமதித்ததாக நான் நினைக்கவில்லை. நமது இந்துத்துவம் புனிதமானது" என்றுத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sivasena leader uddav thackeray support ragul gandhi speech


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->