இந்தியா மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த 16 யூடியூப் சேனல்களுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவு.!
Sixteen YouTube channels block
இந்தியா குறித்த தவறான தகவல்களை பரப்பிய 16 யூடியூப் சேனல்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
கருத்து சுதந்திரம் என்ற பெயரில் தவறான தகவல்களை பரப்பி வரும் சமூக வலை தளங்களுக்கு எதிராக, இந்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அன்மையில் 22 யூடியூப் சேனல்களுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இந்நிலையில், மேலும் 16 யூடியூப் சேனல்களுக்கு எதிராக மத்திய அரசு, அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு, வெளிநாட்டு உறவுகள் மற்றும் பொது வெளியில் பிரச்னையை உருவாக்கும் விதமாக செயல்பட்ட 16 யூடியூப் செய்தி சேனல்களுக்கு இந்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தடை விதித்துள்ளது.
இந்தியாவை சேர்ந்த 10 யூ டியூப் சேனல்கள், பாகிஸ்தானிலிருந்து செயல்படும் 6 யூடியூப் சேனல்கள் என மொத்தம் 16 சேனல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்ப அமைச்சக விதிகளின் கீழ், அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்தி இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
English Summary
Sixteen YouTube channels block