சனிக் கிழமையில் மட்டும் தேடி வந்து கொத்தும் பாம்பு - நிதியுதவி கேட்ட இளைஞர் - உ. பி. யில் ருசிகரம்.. !!
Snake Bite a Man Every Saturday In U P
உ. பி யில் வாரம் தோறும் சனிக்கிழமையில் ஒரு இளைஞரைத் தேடி வந்து பாம்பு கடித்து வருவதாகவும், இதையடுத்து மருத்துவமனை சென்று அந்த இளைஞர் சிகிச்சை பெற்று ஓரிரு நாட்களில் குணமடைந்து திரும்புவதாகவும், இதற்கான சிகிச்சைக்காக மாவட்ட ஆட்சியர் அலுவகத்தை அணுகியுள்ளதாகவும் ஒரு ருசிகர சம்பவம் நடந்துள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் பதேபூரைச் சேர்ந்தவர் விகாஸ் துபே. 24 வயதான இவரை கடந்த 40 நாட்களில் இதுவரை 7 முறை பாம்பு கடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் தொடர்ந்து சிகிச்சைக்கு விகாஸ் துபே செலவு செய்து வருவதால், நிதி நெருக்கடியில் இருப்பதாகத் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் விகாஸ் துபே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அணுகி சிகிச்சைக்கு நிதியுதவி கேட்டுள்ளதாகத் தெரிகிறது. இதுகுறித்து 3 பேர் கொண்ட மருத்துவர் குழு விசாரணை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் இந்த குழுவின் தலைமை மருத்துவ அதிகாரி ராஜீவ் நயன் கிரி இதுகுறித்து தெரிவிக்கையில், அரசு மருத்துவமனைக்குச் சென்றாலே இலவசமாக சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் எனும் போது, விகாஸ் துபே மாவட்ட ஆட்சியரை அணுகி நிதியுதவி கேட்டிருப்பது குறித்து சந்தேகம் எழுந்துள்ளது.
முதலில் அவரை கடித்தது பாம்பு தானா என்றும், ஒவ்வொரு முறை பாம்பு கடித்த போதும் ஒரே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ஓரிரு நாட்களிலேயே அவர் குணமாகி திரும்பியுள்ளதும் ஆராய வேண்டியதாக உள்ளது. அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர் உண்மையான மருத்துவர் தானா என்றும் ஆராய வேண்டியுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Snake Bite a Man Every Saturday In U P