இந்திய அணி தோல்வி; சாப்ட்வேர் இன்ஜினியர் மாரடைப்பால் மரணம்.!! - Seithipunal
Seithipunal


கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக இந்தியாவில் நடைபெற்று வந்த ஐசிசி உலக கோப்பை தொடரின் இறுதிப்போட்டி நேற்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. லீக் மற்றும் அரையிறுதி போட்டிகளில் தோல்வி அடையாமல் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டது. 

டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த ஆஸ்திரேலியா அணிக்கு இந்தியா வெறும் 240 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. 241 என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 43 வது ஓவரில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கு எட்டியது.

இதனால் இந்திய அணி ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இதற்கிடையே ஆந்திராவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இந்திய அணி தோல்வி அடைந்ததை கண்டு மாரடைப்பால் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் துர்க்க சமுத்திரம் பகுதியைச் சேர்ந்த பொறியியலாளரான ஜோதி குமார் தன்னுடைய வீட்டில் உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியை  தொலைக்காட்சியில் பார்த்து கொண்டிருந்தார். இறுதி போட்டியின் போக்கு மாற மாற வேதனையில் இருந்த ஜோதிகுமாருக்கு, திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

பதறி போன அவருடைய குடும்பத்தினர் உடனடியாக ஜோதி குமாரை திருப்பதியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஜோதிகுமாரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனைக்கேட்ட ஜோதி குமாரின் குடும்பத்தினரும், உறவினர்களும் கதறி அழுதனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையேவும், கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Software engineer died cause of heart attack due to Indian team defeat


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->