மது அருந்த பணம் தர மறுத்த தாய்.. மகன் வெறிச்செயல்..!
Son Kills His Mother In Maharastira
மது அருந்த பணம் தர மறுத்த தாயை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் 70 வயது மூதாட்டி தனது மகனுடன் வசித்து வருகிறார். அவரது மகன் மதுவிற்கு அடிமையான தாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று தாயுடன் மது அருந்த பணம் கேட்டுள்ளார் ஆனால் அதற்கு மூதாட்டி பணம் தர மறுக்கவே இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே அங்கிருந்த கத்தியால் அவரை கொடூரமாக குத்தி கொலை செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளார். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக இருந்த அவரது மகனை கைது செய்தனர். மது அருந்த பணம் தராத தாயை மகனை கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Son Kills His Mother In Maharastira