மகா கும்பமேளா 2025; 2 ஆயிரம் டிரோன்கள் மூலம் ஒளிக்காட்சி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு..! - Seithipunal
Seithipunal


'மகா கும்பமேளா 2025' வரும் ஜனவரி 13-ந்தேதி முதல் பிப்ரவரி 26-ந்தேதி வரை 45 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக இந்தியா முழுவதும் இருந்து கோடிக்கணக்கான மக்கள் வருகை தருவார்கள். உலகின் மிகப்பெரிய ஆன்மீக, கலாசார மற்றும் மத நிகழ்வுகளில் ஒன்றாக 'மகா கும்பமேளா' விளங்குகிறது.

இந்த நிலையில், மகா கும்பமேளாவை முன்னிட்டு திரிவேணி சங்கமம் பகுதியில் வானில் சுமார் 2 ஆயிரம் டிரோன்கள் மூலம் ஒளிக்காட்சி நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக உத்தர பிரதேச அரசு தெரிவித்துள்ளது.


 
மகா கும்பமேளாவின் தொடக்க நாள் மற்றும் நிறைவு நாளில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படும் என்றும், புராண கதைகளில் வரும் நிகழ்வுகளை விவரிக்கும் வகையிலான ஒளிக்காட்சி நிகழ்ச்சியாக இது அமையும் என்றும் மாவட்ட சுற்றுலாத்துறை அதிகாரி அபராஜிதா சிங் தெரிவித்துள்ளார்.

மகா கும்பமேளாவிற்கான ஏற்பாடுகளை மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. பிரயாக்ராஜ் நகருக்கு சாலை, ரெயில் மற்றும் விமானம் உள்ளிட்ட அனைத்து வழிகளிலும் வந்து சேர்வதற்கான போக்குவரத்து வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

மகா கும்பமேளாவை முன்னிட்டு பக்தர்களின் தேவைக்காக 1.5 லட்சம் கழிப்பறைகள் கட்டப்படுகின்றன. சுமார் 1.6 லட்சம் குடில்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Maha Kumbh Mela 2025


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->